மெக்ஸிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிரடி வெற்றி!

2026 பிஃபா உலகக் கிண்ணத்தின் ‘குரூப் ஏ’ பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த செக் குடியரசு அணியை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்ஸிகோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக தனது பிரிவில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று (Perfect Group Stage) முழுமையான புள்ளிகளுடன் மெக்ஸிகோ அடுத்த சுற்றுக்கு (Round of 32) முன்னேறியுள்ளது.

மெக்ஸிகோ சிட்டி மைதானத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக சென்ற போதிலும், இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முதல் பாதி 0 – 0 என சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதியில் 55 ஆவது நிமிடத்தில் மெக்ஸிகோவின் வீரர் மமேடியோ சாவேஸ் தனது முதல் சர்வதேச கோலை பதிவு செய்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

61 ஆவது நிமிடத்தில் விங்கர் ஜூலியன் குய்னோனஸ் அசத்தலான கோல் அடித்து மெக்ஸிகோவின் முன்னிலையை 2 – 0 என முன்னிலைப்படுத்தினார்.

94 ஆவது நிமிடத்தில் ஆல்வரோ ஃபிடால்கோ மெக்ஸிகோ சார்பாக 3 ஆவது கோலை அடித்து 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை முழுமையாக்கினார்.

இந்த போட்டியில் மெக்ஸிகோ அணியின் 17 வயது இளம் திறமைசாலியான கில்பர்டோ மோரா களம் இறங்கி வரலாற்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடிய மெக்ஸிகோ வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதனையடுத்து மெக்ஸிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற ‘குரூப் ஏ’ பிரிவின் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா (Round of 32) சுற்றுக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்தவித கோல் அடிக்கப்படவில்லை.

போட்டியின் இரண்டாவது பாதியில் தென் ஆப்பிரிக்கா அதிரடியைக் கூட்டியது. 63 ஆவது நிமிடத்தில் தாபெலோ மாசேகோ கோல் அடித்து 1 – 0 என முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore