கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சு 2026/2027 கல்வியாண்டிற்கான உயர்தர (Grade 12) தொழிற்பயிற்சி பிரிவில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று அறிவித்துள்ளது.
Ordinary Level (O/L) பெறுபேறுகள் எவ்வாறிருந்தாலும், இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் Grade 12 இல் சேர்ந்து Grade 13 வரை கல்வியை தொடர முடியும். இதன் போது தேசிய தொழிற் தகுதி (NVQ Level 4) சான்றிதழும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும் வகையில் பெற முடியும்.
2025 (2026) ஆம் ஆண்டு O/L பரீட்சை எழுதியவர்கள் அல்லது கடந்த 3 ஆண்டுகளுக்குள் பரீட்சை எழுதிய எந்த மாணவரும் தங்கள் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி பிரிவுள்ள பாடசாலைகளில் Grade 12க்கு விண்ணப்பிக்க முடியும்.
Grade 12 இல் மாணவர்கள் மென்மைத் திறன்கள் (Soft Skills) மற்றும் பல்வேறு தொழிற்துறைகள் குறித்து அறிமுகப்படுத்தும் பாடங்களை கற்கலாம். Grade 13 இல் மாணவர்கள் பாடசாலையின் பரிந்துரையின் அடிப்படையில் அரச தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு NVQ Level 4 பயிற்சிக்காக அனுப்பப்படுவர். இங்கு மாணவர்கள் பயிற்சி நிலையத்திலும் வேலை இடத்திலும் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
இதன் மூலம் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், நகை மற்றும் ரத்தின தொழில்நுட்பம், அழகுக்கலை, கலை மற்றும் கைவினை, உணவு உற்பத்தி, ஆடைத் துறை, மின்சாரம் மற்றும் மின்னணு தொழில்நுட்பம், கட்டுமானம், விவசாயம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்து பள்ளிக் கல்வியையும் நிறைவு செய்யும் மாணவர்கள் NVQ Level 4 சான்றிதழைப் பெறுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள், பாடசாலை பட்டியல் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திட்டம், மாணவர்கள் O/L தேர்ச்சி பெறினாலும் பெறாவிட்டாலும் 13 வருட கல்வியை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பங்கள் 2026 ஜூலை 8ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி பிரிவு உள்ள பாடசாலை அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு www.moe.gov.lk அல்லது Vocational Stream அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தை பார்க்கலாம்.





