அன்சத் அஹமட்
உலக குருதிக் கொடையாளர் தினத்தை (ஜூன் 14) முன்னிட்டு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, தகவல் தொழினுட்ப உயர் தேசிய டிப்ளோமா முதலாம் வருட மாணவர்களின் அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வு நேற்று (25/06/2026) இடம் பெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர் நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் இன் நிகழ்வு திட்டமிடப்பட்டு திறம்பட நடைபெற்றது.
குருதிக் கொடையாளர்களின் உயிர் காக்கும் உன்னத பணியைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இனிதே நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தகர்கள், ஊழியர்கள் எமது மனமார்ந்த நன்றிக்கு உரித்தானவர்களே.
மேலும் எமது நிறுவனதின் இந்நிகழ்வுக்காக அனுசரணை வழங்கிய நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், குருதிக் கொடையாளர்கள், நிகழ்வு சிறப்புற உதவிய விரிவுரை யாளர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
சுமார் 50 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






