2026ஆம் ஆண்டின் உலகின் முன்னணி ஆரோக்கியச் சுற்றுலா தலமாக இலங்கை முதலிடம்!

BookRetreats.com வெளியிட்டுள்ள State of Retreats 2026 அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகம் பிரபலமடைந்து வரும் ஆரோக்கியச் சுற்றுலா (Wellness Tourism) தலமாக இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின்படி, BookRetreats தளத்தில் இலங்கையைத் தேடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 100% அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியா (85%), மொரோக்கோ (83%), இங்கிலாந்து (82%) மற்றும் ஸ்பெயின் (80%) ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறை, குறைந்த செலவில் கிடைக்கும் ஆரோக்கியச் சுற்றுலா சேவைகள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவை இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாக BookRetreats.com தெரிவித்துள்ளது.

கண்டியில் உள்ள ஆரோக்கியச் சுற்றுலா முகாம்களில் (Wellness Retreats) சுமார் 373 அமெரிக்க டொலர் செலவில் தங்கும் வசதி கிடைப்பதாகவும், இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவானதாக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை இலங்கை நீக்கியிருப்பதும், நாட்டின் ஆரோக்கியச் சுற்றுலாவை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் மிகப்பெரிய காட்டு யானைகள் கூடும் இடம், நீலத் திமிங்கலங்களை காணும் வாய்ப்பு மற்றும் ஆண்டு முழுவதும் ரசிக்கக்கூடிய கடற்கரைகள் போன்ற இயற்கை ஈர்ப்புகளும் இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாக மாற்றியுள்ளன.

இந்த தரவரிசை, BookRetreats தளத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் கிடைத்த வருடாந்திர தனிப்பட்ட பக்கப் பார்வைகள் (Unique Page Views) அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன், 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரை 1,040 அமெரிக்க பயணிகளை உள்ளடக்கிய ஆய்வின் முடிவுகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore