சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டம், சம்மாந்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, 2026 ஜூன் 25ஆம் திகதி, சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் தங்களது வாகனங்களை பதிவு செய்யுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டதுடன், 2026 ஜூன் 26ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் திகதி, முச்சக்கர வண்டி தரிப்பிடங்களைச் சேர்ந்த வாகனங்களும், வீடுகளில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வேலைத்திட்டம், சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.








