ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று (27) மாலை 7:04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தானைத் தாண்டி அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் அல்லது பொருட்சேதம் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் மற்றும் சேதங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore