போசன் தின மதுபான விற்பனைத் தடையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை

போசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள மதுபான விற்பனைத் தடையை மீறும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் ஜூன் 29 ஆம் திகதி போசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜூன் 28 ஆம் திகதி மாலை முதல் ஜூன் 30 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் நேரம் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் போசன் விழாவை முன்னிட்டு மிஹிந்தலை, மெதவச்சிய, நுவரகம்பலாத்த மத்திய, நுவரகம்பலாத்த கிழக்கு மற்றும் மஹவிலச்சிய ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் போசன் வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பான தகவல்களை 24 மணி நேர அவசர இலக்கமான 1913-க்கு பொதுமக்கள் அறிவிக்குமாறும், உத்தரவை கடுமையாக அமுல்படுத்துமாறு நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore