வாட்ஸ்அப்பில் இனி Username வசதி: முன்பதிவு செய்ய Meta அறிவிப்பு

பிரபல மெசேஜிங் செயலியான WhatsApp, நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட Username வசதியை படிப்படியாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கான தனிப்பட்ட Username-ஐ முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இதற்காக, WhatsApp இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவோர்:

Settings > Account > Username

என்ற பகுதிக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான Username-ஐ பதிவு செய்யலாம்.

இந்த வசதி அறிமுகமான பிறகு, புதிய நபர்கள் அல்லது வணிக நிறுவனங்களுடன் உரையாடலைத் தொடங்கும் போது, பயனர்கள் விரும்பினால் தங்களது தொலைபேசி எண்ணை பகிராமல், Username மூலமாகவே தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும் என Meta தெரிவித்துள்ளது.

இவ்வசதி தற்போது கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருவதால், அனைத்து பயனர்களுக்கும் உடனடியாக கிடைக்காமல் இருக்கலாம் என்றும், வரும் மாதங்களில் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் Meta அறிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore