அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இனி போர்த்துகலுக்காக விளையாடுகிறார்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (Moises Henriques), தனது சர்வதேச கிரிக்கெட் அணியை மாற்றி இனி போர்த்துகல் அணிக்காக விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதான ஹென்ரிக்ஸ், அவுஸ்திரேலியாவுக்காக 44 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், கடைசியாக 2021ஆம் ஆண்டு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

பிறப்பால் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த அவர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மூன்று ஆண்டுக் கட்டாய இடைவேளை விதிமுறையை பூர்த்தி செய்துள்ளதால், இனி போர்த்துகல் அணிக்காக விளையாட தகுதி பெற்றுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள 2028 T20 உலகக் கிண்ண ஐரோப்பிய தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்த்துகல் அணிக்காக அவர் களமிறங்கவுள்ளார்.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஹென்ரிக்ஸ், வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும், உலகின் பல நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சியடைந்தால், எதிர்கால உலகக் கிண்ணத் தொடர்கள் இன்னும் போட்டித்தன்மை மிக்கதாகவும், உலகளாவிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும் மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore