ஹோகந்தரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அதிவேக மோட்டார் சைக்கிள்கள் 5 மற்றும் போலி வாகன இலக்கத் தகடுகள் 2 உடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (29) நண்பகல் அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தரை பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகளும் மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





