AI எதிர்பார்த்த தரத்தை வழங்காததால் அனுபவமிக்க பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திய Ford

அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான Ford, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியக்க தரப் பரிசோதனை முறைகள் எதிர்பார்த்த தரத்தை வழங்கத் தவறியதால், 350 அனுபவமிக்க பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது.

இவர்களில் சிலர் முன்னாள் Ford ஊழியர்களாகவும், மற்றவர்கள் உதிரிப்பாக விநியோக நிறுவனங்களில் பணியாற்றியவர்களாகவும் உள்ளனர்.

Ford நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி குமார் கல்ஹோத்ரா, தரக் கட்டுப்பாட்டில் AI மீது அதிகமாக நம்பிக்கை வைத்தது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாகன ஹார்ட்வேர் பொறியியல் பிரிவு துணைத் தலைவர் சார்ல்ஸ் பூன், வடிவமைப்பு தேவைகளை AI-க்கு வழங்கினால் மட்டுமே உயர்தர தயாரிப்பு கிடைக்கும் என நினைத்தது தவறான கணிப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், Ford நிறுவனம் AI பயன்பாட்டை முற்றிலும் கைவிடவில்லை. மாறாக, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட அனுபவமிக்க பொறியாளர்கள் இளம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு, AI அமைப்புகளையும் மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையால் உத்தரவாதச் செலவுகள் மற்றும் வாகனங்களை மீள அழைக்கும் (Recall) செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அண்மையில் வெளியிடப்பட்ட JD Power Initial Quality Survey-யில் பொதுமக்கள் பயன்பாட்டு வாகனப் பிரிவில் Ford முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore