காணாமல் போன விசேட வைத்தியர் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போன நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் பயணித்த கார் மஹியங்கனை நோக்கிச் சென்றமை மீகஹகிவுல பகுதியில் பதிவான CCTV காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார், தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், மஹியங்கனை–மாப்பாக்கடவெவ பகுதியை அண்மித்த பாறையொன்றிலிருந்து வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore