மின்கட்டண உயர்வால் சூரிய மின்சக்திக்கு வேகமாக மாறும் பிலிப்பைன்ஸ்

அதிகரித்து வரும் மின்கட்டணச் செலவுகளை குறைக்கும் நோக்கில், பிலிப்பைன்ஸ் மக்கள் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்பலகைகளை (Rooftop Solar Panels) அதிக அளவில் நிறுவி வருகின்றனர்.

ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து, சூரிய மின்பலகைகள் இறக்குமதியில் உலகளவில் அதிக செலவிட்ட நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம் ஆரம்பமான பின்னர், பிலிப்பைன்ஸின் முக்கிய மின்சார விநியோக நிறுவனமான Meralco, மின்கட்டணத்தை சுமார் 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதையடுத்து, சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவில் இருந்து சூரிய மின்பலகைகள் இறக்குமதி 145 சதவீதம் உயர்ந்து 407 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

அதேவேளை, சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவும் நிறுவனங்களுக்கும் அதிகளவில் கோரிக்கைகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்ப முதலீட்டுச் செலவு அதிகமாக இருப்பது, உபகரண விநியோக சிக்கல்கள் மற்றும் அரசின் நிதி உதவிகளைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் போன்றவை இந்தத் திட்டம் விரிவடைவதற்கான முக்கிய சவால்களாக உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore