அம்பாறை மாவட்ட விஷேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

அம்பாறை மாவட்ட விஷேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெணிகே அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாரச்சி அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்து கருத்துகளை முன்வைத்தார்.

மேலும், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

-ஊடகப் பிரிவு-

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore