மாவனெல்லை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, சகோதரரின் தாக்குதலால் 42 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் திங்கட்கிழமை (29) இரவு மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின்படி, இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தீவிரமடைந்து, அதன்போது சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்ணஹேன, ஆலத்தார பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





