அம்பாறை தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு வனக் காப்பகப் பகுதியில் இருந்து ஸ்நைப்பர் துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 7 தோட்டாக்கள் விசேட அதிரடிப்படையினரால் (STF) மீட்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மரத்தின் பொந்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக விசாரணைகளுக்காக தமண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





