சவுதி அரேபியாவின் ராஸ் தனூரா பகுதியில் இடம்பெற்ற சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியா அரசு மற்றும் மக்களுக்கு இலங்கை அரசின் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி எண்ணெய் நிறுவனமான அராம்கோ இயக்கிய ஹெலிகாப்டர், சவுதி அரேபியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ராஸ் தனூராவில் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் தொடர்பில் சவுதி அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





