ஈரான் அணிக்கு 2026 உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றில் இடம் மறுக்கப்பட்டதாகக் கூறி, FIFA மீது 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரான்–அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஒருவர் இந்த வழக்கை அமெரிக்காவின் பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
Egypt அணிக்கு எதிரான போட்டியில், ஈரான் அடித்த கடைசி நேர வெற்றி கோல் VAR (Video Assistant Referee) மூலம் offside எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. அந்த முடிவு ஈரானை Round of 32 சுற்றுக்கு முன்னேற விடாமல் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் போட்டி முழுவதும் ஈரானுக்கு நியாயமான அணுகுமுறை வழங்கப்படவில்லை என்றும், FIFA பாகுபாடு காட்டியதாகவும் அவர் தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கிற்கு FIFA இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வழங்கவில்லை.





