ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு (Denuclearisation) தொடர்பான நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக நடைபெற்று வருகின்றன. அவர்கள் மிகவும் பயனுள்ள சந்திப்புகளை நடத்தியுள்ளனர். அடுத்தகட்ட முன்னேற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம். மூன்று இரவுகள் தொடர்ச்சியாக நாம் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டோம். ஆனால் தற்போது இரு தரப்புக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு உருவாகியுள்ளது” எனக் கூறினார்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





