மஜீட். ARM
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் வருடாந்த விளையாட்டுப் பெருவிழாவின் இறுதிப் போட்டிகள், சொறிக்கல்முனை சாந்த குரூஸ் பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் திருமதி ராகுல நாயகி சஜிந்ரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாகப் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபை ராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த வருடம் (2025) இடம்பெற்ற மாகாண மட்ட எல்லே பெண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும், பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பிரதேசத்தின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






