இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், 2026 ஆம் ஆண்டுக்கான Canada Fund for Local Initiatives (CFLI) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அமைப்புகளை அறிவித்துள்ளது.
இலங்கையின் வலுவான சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் அடிமட்ட சமூக தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகளில்:
Eastern Self Reliant Community Awakening Organisation
H/Sri Kawantissa Vocational Training Center
National Peace Council of Sri Lanka
Sevalanka Foundation
South Asian Women in Media
Sri Lanka Unites
The Butterfly Peace Garden
Transparency International Sri Lanka
ஆகிய அமைப்புகள் உள்ளடங்குகின்றன.
இவ்வமைப்புகள் உள்ளடக்கிய நிர்வாகம், காலநிலை மாற்ற நடவடிக்கைகள், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளை முன்னேற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளன.
மேலும், இந்தத் திட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர் வலுவூட்டல், காலநிலை நட்பு விவசாயம், குடிமக்கள் மற்றும் டிஜிட்டல் உரிமைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் பாலின சமத்துவம் போன்ற முக்கிய விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல தரமான முன்மொழிவுகள் கிடைத்த போதிலும், CFLI திட்டம் உள்ளூர் பங்காளிகளால் முன்னெடுக்கப்படும் சிறிய அளவிலான ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த திட்டமாகும் என கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தெரிவுசெய்யப்படாத விண்ணப்பதாரர்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள அடுத்த முன்மொழிவு அழைப்பில் மீண்டும் விண்ணப்பிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.





