கட்டாரின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு!

முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15, டோஹாவில் உள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார்.

அங்கு கட்டார் நாட்டின் உள்துறை அமைச்சர் Qatar’s Minister of Interior is His Excellency Sheikh Khalifa bin Hamad bin Khalifa Al Thani அவர்களினால் வரவேற்கப்பட்ட பிரதமர், கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானி (HH the Amir Sheikh Tamim bin Hamad Al-Thani) அவர்களைச் சந்தித்தார்.

இதன்போது பிரதமர், காலஞ்சென்ற முன்னாள் (Father Amir) ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானி (Sheikh Hamad bin Khalifa Al-Thani) அவர்களின் மறைவு குறித்துக் கட்டார் அமீர் அவர்களிடம் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் கட்டார் நாட்டின் பிரதி அமீர் ஷேக் அப்துல்லா பின் ஹமட் அல்-தானி, பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி மற்றும் சூரா சபையின் சபாநாயகர் ஹசன் பின் அப்துல்லா அல் கானிம் உள்ளிட்ட அரச குடும்பத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், காலஞ்சென்ற முன்னாள் அமீர் அவர்களின் புதல்வர்கள் உள்ளிட்ட அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore