2 கிலோ ஐஸ்ஸூடன் இருவர் கைது

2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபரெக்க கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அந்த இடத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கு முயன்றபோது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, 2 சந்தேக நபர்களும், போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மேலதிக விசாரணைக்காக திஹகொடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய பொரெல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

திஹகொடா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore