2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியை மாணவர்கள் பார்வையிடும் வகையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஜூலை 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் பொதுக் கல்வித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கால்பந்துக்கு மிகுந்த ஆதரவு கொண்ட மாநிலமாக விளங்கும் கேரளாவில், குறிப்பாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ள நிலையில், பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடுமுறை பொதுக் கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், கல்லூரிகளுக்கு மாநில அளவில் விடுமுறை அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





