இலங்கை கடவுச்சீட்டு (Passport), Henley Passport Index 2026 உலக தரவரிசையில் 94ஆவது இடத்தைப் பெற்று, 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது சிறந்த நிலையை பதிவு செய்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அல்லது வருகை விசா (Visa on Arrival) மூலம் 39 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் இலங்கை, லிபியா நாட்டுடன் இணைந்து 94ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கடவுச்சீட்டு தரவரிசை தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
2021 – 107ஆவது இடம்
2022 – 102ஆவது இடம்
2023 – 100ஆவது இடம்
2024 – 96ஆவது இடம்
2025 – 97ஆவது இடம்
2026 – 94ஆவது இடம்
2014ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு 88ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னணி கடவுச்சீட்டு தரவரிசைகளில் ஒன்றாக கருதப்படும் Henley Passport Index, 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை, முன்கூட்டியே விசா பெறாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்துகிறது.
இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான IATA வழங்கும் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.





