74 ஆண்டுகளுக்கு பின்னர் Pan Am விமான சிதைவுகள் கண்டுபிடிப்பு

Puerto Rico, ஜூலை 23 – 1952ஆம் ஆண்டு Puerto Rico அருகே கடலில் விபத்துக்குள்ளான Pan Am “Clipper Endeavor” விமானத்தின் சிதைவுகள் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Air/Sea Heritage Foundation மற்றும் Deep Sea Vision நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில், கடலடியில் சுமார் 2,000 அடி ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1952 ஏப்ரல் 11ஆம் திகதி New York நோக்கி புறப்பட்ட Douglas DC-4 விமானம், இயந்திர கோளாறு காரணமாக கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த 69 பேரில் 52 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர்.

இந்த விபத்துக்குப் பின்னர் விமானப் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பயணிகளுக்கான பாதுகாப்பு விளக்கங்கள், அவசர வெளியேறும் வழிகள் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் கட்டாயப்படுத்தப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட விமான சிதைவுகளை மீட்கும் திட்டம் இல்லை எனவும், உயிரிழந்தவர்களின் நினைவிடமாக அந்த இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore