இலங்கையின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், 2027 (ஹிஜ்ரி 1448) ஹஜ் யாத்திரைக்கான அங்கீகரிக்கப்பட்ட 98 ஹஜ் பயண முகவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட இந்த பயண முகவர்கள், அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயண முகவர்களுக்கும் திணைக்களம் வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பான, சுமூகமான மற்றும் வெற்றிகரமான யாத்திரையை உறுதிப்படுத்த இணைந்து செயல்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.












