இங்கிலாந்தில் முன்னாள் கால்பந்து வீரர் கேரி லினேக்கர் மற்றும் இசை தயாரிப்பாளர் பிரையன் ஈனோ உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட செல்வந்தர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்குமாறு புதிய பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த திறந்த கடிதத்தில், “நாங்கள் அதிக வரி செலுத்த முடியும். இது சாதாரணமாக உழைத்து வருமானம் பெறுபவர்களுக்கு விதிக்கப்படும் வரி அல்ல; மிகப் பெரிய செல்வம் கொண்டவர்களின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு விதிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patriotic Millionaires என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கோரிக்கையில், £10 மில்லியனுக்கு (சுமார் 10 மில்லியன் பவுண்ட்) மேற்பட்ட சொத்துகளுக்கு 2% செல்வ வரி (wealth tax) விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வரி முறை சமூக சமத்துவத்தை அதிகரிக்கவும், நாட்டின் முதலீடுகளுக்கு உதவவும் செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் கெமி பேடனொக், “அதிக வரி செலுத்த விரும்புபவர்கள் நேரடியாக அரசுக்கு பணம் வழங்கலாம்; யாரும் அதைத் தடுக்கவில்லை” எனக் கூறினார்.
கேரி லினேக்கர், BBC-யின் முன்னாள் அதிக சம்பளம் பெற்ற தொகுப்பாளராக இருந்தவர். அவர் வெளியேறுவதற்கு முன்பு ஆண்டுக்கு சுமார் £1.3 மில்லியன் சம்பளம் பெற்றதாகவும், அவரது சொத்து மதிப்பு சுமார் £30 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





