சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை: மேசைப்பந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் Under 20 Girls அணியினர் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

2026 ஜூலை 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு Webar Indoor Stadium இல் நடைபெற்ற இப்போட்டியில், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.

இதன் மூலம் அவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் 1st Runner Up (இரண்டாம் இடம்) பட்டத்தைப் பெற்று பாடசாலைக்கும், சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் குறித்த மாணவிகள் தேசிய மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண மட்ட பெரு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்படுவது ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த வரலாற்று வெற்றியைப் பெற்ற மாணவிகளுக்கும், அவர்களை சிறப்பாகப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் KLM. ஸகி அவர்களுக்கும், தேவையான ஆதரவுகளை வழங்கிய பாடசாலை அதிபர் S. எலங்கோபன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore