கண்டி எசல பெரஹராவில் மாற்றங்கள் செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய் – பிரதி அமைச்சர் மறுப்பு

கண்டி எசல பெரஹராவின் (Dalada Perahera) நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவியுள்ள குறித்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள அவர், இந்த போலியான பதிவை வெளியிட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில், முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் கண்டி எசல பெரஹரா வீதிகளில் ஊர்வலமாகச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், தாம் ஊடக சந்திப்பில் தெரிவித்த உண்மையான கருத்துக்களை விளக்கும் காணொளியை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore