போட்டியாளர்களை புறக்கணித்து சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக குற்றச்சாட்டு – கூகுளுக்கு €890 மில்லியன் அபராதம்

ஜூலை 24, 2026 | ஐரோப்பிய ஒன்றியம்

போட்டியாளர்களின் சேவைகளை விட தனது சொந்த செயலிகள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) €890 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைச் சட்டத்தின் (Digital Markets Act – DMA) கீழ் தொழில்நுட்ப நிறுவனமொன்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட முதல் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

கூகுள் தனது தேடல் முடிவுகளில் விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு சேவைகளில் சொந்த சேவைகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி €460 மில்லியன் அபராதமும், Google Play Store விதிமுறைகள் மூலம் வெளிப்புற மலிவான சலுகைகளை பயனர்களுக்கு காட்ட அனுமதிக்கவில்லை எனக் கூறி மேலும் €430 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், சந்தையில் சமமான போட்டியை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை அவசியமானது என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த கூகுள், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமர்சித்துள்ளது.

கூகுளுக்கு இந்த விதிமுறைகளை பின்பற்ற 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore