பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு பதவி உயர்வு

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (Javelin Throw) பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படை வீரர் ருமேஷ் தரங்கவுக்கு, இலங்கை விமானப்படை கோர்பரல் (Corporal) பதவியிலிருந்து சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கு உயர்வு வழங்கியுள்ளது.

இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இந்த பதவி உயர்வை வழங்கி, இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தடகள தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த ருமேஷ் தரங்கவின் சாதனையை பாராட்டியுள்ளார்.

அத்துடன், வீரரை சிறப்பாகப் பயிற்றுவித்த ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரி டோனி பிரசன்னாவுக்கும், வீரரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பங்களித்த மசாஜ் நிபுணர் கோர்பரல் சந்திம குருசிங்கவுக்கும் தளபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ருமேஷ் தரங்கவின் சாதனை அவரது தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்லாது, அதன் பின்னணியில் உழைத்த முழுக் குழுவினரின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாகவும், இது இலங்கை விமானப்படைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சாதனையாகவும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore