101 நாள் செம்மணி அகழ்வுப் பணியில் 515 மனித எலும்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 100 ஆவது நாளைக் கடந்து, இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 506 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 47 ஆவது நாளான நேற்றைய தினம் சனிக்கிழமை மேலும் 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, எழுமாறாக தோண்டப்பட்ட இரண்டு சோதனைக் குழிகளில், ஒரு குழியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore