மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பாலின மரபணு பரிசோதனை – தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு

டென்னிஸ் போட்டிகளில் பெண் வீராங்கனைகளின் உயிரியல் பாலினத்தை (Biological Sex) உறுதி செய்வதற்காக ‘SRY’மரபணு பரிசோதனையை ஒருமுறை கட்டாயமாக்க மகளிர் டென்னிஸ் சங்கம் எடுத்துள்ள தீர்மானம் விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கன்னத்தின் உட்பகுதியில் மாதிரிகள் எடுத்தோ அல்லது இரத்தப் பரிசோதனை மூலமாகவோ இந்த ஆய்வு நடத்தப்படும் என்றும், இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடர்களில் பங்கேற்க முடியும் என்றும் மகளிர் டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, போட்டிகளில் நியாயமான சூழலை உருவாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் உலகின் முதன்மை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka)ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும், ‘ஸ்போர்ட்ஸ் & ரைட்ஸ் அலைன்ஸ்’ அமைப்பின் பணிப்பாளர் மற்றும் பிரபல வீராங்கனை கோகோ காஃப் (Coco Gauff) உள்ளிட்டோர், இதுபோன்ற பரிசோதனைகள் பெண் வீராங்கனைகளுக்கு மன உளைச்சலையும் சமூகப் புறக்கணிப்பையும் ஏற்படுத்துவதோடு மாற்றுப் பாலின சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் எனக் கூறி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore