(Ansath Ahamed)
உலக தாய்ப் பாலூட்டல் வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலயில் இன்று திங்கட் கிழமை (17) தாய்ப்பாலூட்டல் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபா ஷங்கர் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறை, மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் நிபுணர்கள் டாக்டர் உதார சீ தயானந்த, டாக்டர் . எம்.டீ.எம் ரிஹான் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்
மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திற்க்கு பொறுப்பான டாக்டர். பி.ஜி.பி டானியல் அவர்கள் கலந்துகொண்ட
இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார மாதுக்களுக்கும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் பணிபுரியும் மருத்துவ மாதுக்களுக்கும் தாய்ப் பாலூட்டல் தொடர்பான விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கான வளவளராக டாக்டர். எஸ்.எம். சபா (குழந்தை மருத்துவ நிபுணர்) அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில்
பயிற்சி பெற்ற மருத்துவ மாதுக்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கபட்டதோடு இந் நிகழ்வு வெற்றிபெற உழைத்த வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி மலர்களும் தூவப்பட்டன.





