செப்டம்பர் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களும் Online மூலம் செலுத்தும் வசதி

இலங்கையில் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் (Traffic Fines) Online மூலம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான Online வசதி GovPay திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இதனுடன், இலங்கையின் முதலாவது Digital Identity Card-ஐ இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்துதல், National Super App, National QR Drive, National Data Exchange மற்றும் Number Portability உள்ளிட்ட பல டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பிலும் முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore