சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாடளாவிய ரீதியில் 1,037 சாரதி மற்றும் நடத்துநர் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்களை கோரியுள்ளது.
🔹 சாரதி – 788 வெற்றிடங்கள்
🔹 நடத்துநர் – 249 வெற்றிடங்கள்
சாரதி பதவிக்கு 21–45 வயதுக்குட்பட்ட, G.C.E. O/L பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், 3 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
நடத்துநர் பதவிக்கு 18–45 வயதுக்குட்பட்ட, G.C.E. O/L இல் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💰 சாரதி: ரூ.40,847 அடிப்படை கொடுப்பனவு
💰 நடத்துநர்: ரூ.40,008 அடிப்படை கொடுப்பனவு
➕ ரூ.17,800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, மேலதிக நேர மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும்.
📅 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி: 07.09.2026
விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் இலங்கை போக்குவரத்து சபை, No. 200, Kirula Road, Narahenpita, Colombo 05 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.





