சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம்: மக்கள் அச்சத்தில்!

​சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் தங்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

​இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவரும் காட்டு யானைகள் வீட்டுத் தோட்டங்கள், மதில்கள் மற்றும் பயன்தரும் வாழை, தென்னை மரங்களைச் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​இந்தச் சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காகச் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். ஹனீபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விக்கான், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore