இந்த ஆண்டில் இதுவரை வாகன விபத்துக்களால் 1,749 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் ஆரம்ப நாள் முதல் நேற்று (20) வரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

இந்த ஆபத்தான வாகன விபத்துகள் காரணமாக 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாரிய விபத்துகளால் 4,556 பேரும், சிறிய விபத்துகளால் 7,295 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சேதங்களாக 3,232 பதிவாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 576 பாதசாரிகள், 617 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 122 பின்னுக்கிருக்கும் பயணிகள், 119 மிதிவண்டி ஓட்டுநர்கள், 139 சாரதிகள் மற்றும் 173 பயணிகள் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore