சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் – வர்த்தகர்களுக்கு பிரதி அமைச்சர் எச்சரிக்கை

கொழும்பு, ஆகஸ்ட் 22: சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, வரி செலுத்தப்படாத அல்லது குறைந்த பெறுமதியில் (Undervaluation) காட்டி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பொருட்களின் பின்னணியை கண்டறியும் வகையில் அதிகாரிகள் தற்போது “Backward Audits” எனப்படும் பின்தொடர்பு சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விற்பனைக்காக கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் முறையான Invoice/விலைப்பட்டியல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதில் உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரின் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த Backward Audit நடவடிக்கையின் மூலம், பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் → விநியோகஸ்தர்கள் → இறக்குமதியாளர்கள் எனப் பின்னோக்கி கண்காணிக்கப்பட்டு, தேவையான சுங்க வரிகள் செலுத்தப்பட்டுள்ளனவா மற்றும் பொருட்களின் இறக்குமதி பெறுமதி குறைத்து காட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.

மேலும், வழக்கத்திற்கு மாறாக மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பொருட்கள் அல்லது dumping தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், தொழில் அமைச்சிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, “On Approval Bill” எனப்படும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் எதுவும் இல்லை என்றும், அவ்வாறான ஆவணங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கை, அண்மையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட 108 சோதனை நடவடிக்கைகளில், சுமார் ரூ.1.5 மில்லியன் பெறுமதியான இறக்குமதி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை செய்யப்பட்ட 84 வர்த்தக நிலையங்களில், பொருட்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டன என்பதை நிரூபிக்கும் முறையான ரசீதுகள், Bills அல்லது Invoices வழங்க முடியாத நிலை காணப்பட்டதாக CAA தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள், முகம் மற்றும் உடல் அழகுசாதனப் பொருட்கள், Perfumes, Hair-care products, Sports shoes உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore