அவுஸ்திரேலியாவுக்கும் சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இடையே மக்கேயில் (Mackay) நடைபெற்றுவரும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணியை 64 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலிய அணி சுருட்டியுள்ளது.
அதிசயிக்கத்தக்க வகையில் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்; 10 ஓவர்களை வீசிய அவர், அதற்காக 12 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதற்கு மேலதிகமாக, பெட் கம்மின்ஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் இன்னிங்ஸின் அதிகப்படியான ஓட்டங்களை எடுத்தவராக, இறுதி துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷொரிபுல் இஸ்லாம் பெற்ற 14 ஓட்டங்களே காணப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





