காதலியின் 3,400 முத்தங்களால் ரூ.5,500 அபராதம் செலுத்திய காதலன்!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், காதலியின் வித்தியாசமான செயலால் காதலன் ஒருவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரின் காரில் அவரது காதலி சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். இதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முத்த அடையாளங்கள் முழுவதும் பதிக்கப்பட்டிருந்த காரை ஆதித்யா வீதியில் ஓட்டிச் சென்ற நிலையில், பலர் அதனை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, காரின் பதிவு இலக்கத்தை பயன்படுத்தி பொலிஸார் அதன் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர். பின்னர், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததாகக் கூறி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரை தற்காலிகமாக பொலிஸார் கைப்பற்றியதுடன், மன்னிப்புக் கோரிய பின்னர் காரை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை, காரில் இருந்த அனைத்து லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களையும் ஆதித்யாவே அழிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

காதலியின் 3,400 முத்தங்கள் இறுதியில் காதலனுக்கு ரூ.5,500 அபராதமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore