இரத்மலானை விமான நிலையத்தில் இன்று (25) தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 152 ரக பயிற்சி விமானம் கடினமாக தரையிறங்கியுள்ளது.
4R-DRA என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட விமானம் தரையிறங்கிய போது சேதமடைந்துள்ளதாகவும், விமானி எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானத்தை அங்கிருந்து அகற்றி, பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





