நுவரெலியா கிரகரி வாவியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதால், அதனை அருந்துவது மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கிரகரி வாவிக்கு அருகிலுள்ள விவசாயப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஏனைய இரசாயனக் கழிவுகள் நீரில் கலப்பதால், வாவியின் நீர்த் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வில், நீரில் காணப்படும் சில இரசாயனக் கூறுகளின் அளவு வழக்கமான மட்டத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கிரகரி வாவி நீரை குடிநீராக பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 பொதுமக்கள்: கிரகரி வாவி நீரை நேரடியாக அருந்துவதை தவிர்க்கவும்.





