புதிய ICC ஆடவர் டெஸ்ட் வீரர் தரவரிசையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 5 இடங்கள் முன்னேறியுள்ளனர்.
இதன்படி, அசித பெர்னாண்டோ டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 15ஆவது இடத்திற்கும், பிரபாத் ஜயசூரிய 16ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா இரண்டு இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதேவேளை, சொனால் தினுஷ 49 இடங்கள் முன்னேறி 54ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் பின்னர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதுடன், அவரது சக வீரர் ஜோ ரூட்டை விட 24 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.





