கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், புகையிரத நடவடிக்கைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவதையும் தடுக்கும் வகையில் இலங்கை புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் மூலம் முக்கிய தகவல்களை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுவதன் மூலம்,
🔹 புகையிரத சேவையின் நம்பகத்தன்மை
🔹 பயணிகளின் பாதுகாப்பு
🔹 நிறுவனத்தின் ஒழுக்கம்
ஆகியவை பாதிக்கப்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
📌 உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி, இனிமேல் கீழ்க்கண்ட அதிகாரிகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது:
- புகையிரத பொது முகாமையாளர்
- புகையிரத உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர்
- தகவல் அதிகாரி
மேலும், சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





