நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
384 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்:
- 291 பேர் வெளிநாட்டவர்கள்
- 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்
திரிசூலி ஆற்றில் திடீரென நீர்மட்டமும் நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் அதிகளவு வண்டல் மண் கலந்துள்ளதாக வெளியாகியுள்ள காணொளிகளில் தெரியவருகிறது.
🚁 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சில பகுதிகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் ஹெலிகொப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
🇮🇳 இதேவேளை, நேபாளத்திற்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ரசுவா மாவட்டத்தின் திமுர் (Timure) பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





