உலக சுகாதார அவசரநிலைகளுக்கான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும் இலங்கை

உலக சுகாதார அமைப்பின் (WHO) அழைப்பை ஏற்று, Universal Health and Preparedness Review (UHPR) எனப்படும் புதிய சுகாதாரத் தயார்நிலை மதிப்பாய்வை நடத்த இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

சுகாதார அவசரநிலைகளை அடையாளம் காணுதல், தடுப்பது மற்றும் அவற்றுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தன்னார்வ மதிப்பாய்வு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மதிப்பாய்வு, மதிப்பாய்வு செய்யப்படும் நாட்டின் தலைமையில் நடைபெறுவதுடன், ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று கருத்துக்களை வழங்குவார்கள்.

மேலும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பயனுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இலங்கையில் Universal Health and Preparedness Review (UHPR) நடத்துவதற்கான சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore