அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கனடா புதிய பதிலடி வரிகளை அறிவித்துள்ளது.
கனடா அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, சுமார் 27.6 பில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளன. எஃகு மற்றும் அலுமினியம், பால் பொருட்கள், மின்சாதனங்கள், விவசாய உபகரணங்கள், காகிதம், பிளாஸ்டிக் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பல துறைகள் இதனால் பாதிக்கப்படவுள்ளன.
புதிய வரிகள் 15% முதல் 50% வரையிலான அளவில் இருக்கும் எனவும், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தக மோதலால் பாதிக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக 7.5 பில்லியன் கனேடிய டொலர் நிதியுதவித் திட்டத்தையும் கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்கா கனேடிய பொருட்களுக்கு அண்மையில் 50% வரி விதித்ததைத் தொடர்ந்து கனடா இந்த பதிலடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





