இஸ்லாமியர்களால் புனித நாளாகக் கருதப்படும் மீலாதுன் நபி தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற உயரிய பண்புகளை நினைவுகூரும் நாளாகவும் மீலாதுன் நபி தினம் அமைகிறது.
நபிகளாரின் 23 ஆண்டுகால பிரசங்கப் பணிகள், தியாகங்கள் மற்றும் வாழ்க்கை முன்மாதிரியை நினைவுகூரும் இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற நற்பணிகளை மேற்கொள்வது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்.





